Friday, March 5, 2010

பறிபோகும் பத்திரிக்கை சுதந்திரம்


டபிள்யூ.ஆர். வரதராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி மோதலே காரணம் என்று மக்கள் தொலைக்காட்சி 4ம் தேதி இரவு செய்தி வெளியிட்டது.இது கட்சியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவறான செய்து, இதைக் கண்டித்து மக்கள் தொலைக்காட்சி முன்பு இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.
5ம் தேதி காலை 100க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு கூடினர்.11 மணிக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வடசென்னை செயலாளர் சண்முகம், தென் சென்னை அமைப்பாளர் பீமாராவ் ஆகியோர் தலைமையில் சுமார் 100 பேர் திரண்டு வந்தனர்.
அவர்கள் மக்கள் டி.வி.க்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அலுவலக வாசல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். அதையும் மீறி சிலர் உள்ளே புகுந்தனர்.அப்போது மக்கள் டி.வி. அலுவலகம் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. அலுவலகத்தின் காவலாளியை சரமாரியாக தாக்கி விட்டு உள்ளே ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து வெளியே தள்ளினார்கள். ஆனாலும் சிலர் தொடர்ந்து கல்வீசினார்கள். இதில் ஊழியர்கள் பாபு, கார்த்திக் கேமராமேன் ராஜேசும் காயம் அடைந்தார். அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும், காரையும் அடித்து நொறுக்கினர். கல்வீச்சில் மக்கள் டி.வி. அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்த ஒளிபரப்பு சாதனங்களும் சேதம் அடைந்தன.
வெளியே நின்ற கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் டி.வி. மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது கட்சிக்கு பின்னடைவே
ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை, இந்த அலுவலகங்கள் தாக்கபடுவது என்பது, குடியிருக்கும் வீட்டை, உள்ளே இருந்து உடைப்பதற்கு சமம். மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து, கட்சியை வளர்த்து, தொழிலாளர்களுக்கான கட்சி என மார் தட்டி கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுபோல பத்திரிக்கை அலுவலகத்தை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிவதும் தொழிலாளர்கள் என்பது கட்சி தொண்டர்களுக்கு தெரியாதா? தவறு என்றால் அதை சுட்டி காட்டுவதற்கு இதை போல நடந்து கொள்வது தேசிய கட்சிக்கு முறையான செயலா ? முறைப்படி கோர்டில் சந்திக்கலாம். தங்கள் கட்சியை ஆளும் கட்சியினர் விமர்சித்த போது இது போல தடியுடன் சென்றார்களா ? ஏற்கனவே சந்தர்பவாததால் மக்கள் மனதில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இது மிகப்பெரும் சரிவையே உண்டாக்கும்.