Friday, March 5, 2010
பறிபோகும் பத்திரிக்கை சுதந்திரம்
டபிள்யூ.ஆர். வரதராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி மோதலே காரணம் என்று மக்கள் தொலைக்காட்சி 4ம் தேதி இரவு செய்தி வெளியிட்டது.இது கட்சியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவறான செய்து, இதைக் கண்டித்து மக்கள் தொலைக்காட்சி முன்பு இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.
5ம் தேதி காலை 100க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு கூடினர்.11 மணிக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வடசென்னை செயலாளர் சண்முகம், தென் சென்னை அமைப்பாளர் பீமாராவ் ஆகியோர் தலைமையில் சுமார் 100 பேர் திரண்டு வந்தனர்.
அவர்கள் மக்கள் டி.வி.க்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அலுவலக வாசல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். அதையும் மீறி சிலர் உள்ளே புகுந்தனர்.அப்போது மக்கள் டி.வி. அலுவலகம் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. அலுவலகத்தின் காவலாளியை சரமாரியாக தாக்கி விட்டு உள்ளே ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து வெளியே தள்ளினார்கள். ஆனாலும் சிலர் தொடர்ந்து கல்வீசினார்கள். இதில் ஊழியர்கள் பாபு, கார்த்திக் கேமராமேன் ராஜேசும் காயம் அடைந்தார். அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும், காரையும் அடித்து நொறுக்கினர். கல்வீச்சில் மக்கள் டி.வி. அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்த ஒளிபரப்பு சாதனங்களும் சேதம் அடைந்தன.
வெளியே நின்ற கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் டி.வி. மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது கட்சிக்கு பின்னடைவே
ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை, இந்த அலுவலகங்கள் தாக்கபடுவது என்பது, குடியிருக்கும் வீட்டை, உள்ளே இருந்து உடைப்பதற்கு சமம். மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து, கட்சியை வளர்த்து, தொழிலாளர்களுக்கான கட்சி என மார் தட்டி கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுபோல பத்திரிக்கை அலுவலகத்தை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிவதும் தொழிலாளர்கள் என்பது கட்சி தொண்டர்களுக்கு தெரியாதா? தவறு என்றால் அதை சுட்டி காட்டுவதற்கு இதை போல நடந்து கொள்வது தேசிய கட்சிக்கு முறையான செயலா ? முறைப்படி கோர்டில் சந்திக்கலாம். தங்கள் கட்சியை ஆளும் கட்சியினர் விமர்சித்த போது இது போல தடியுடன் சென்றார்களா ? ஏற்கனவே சந்தர்பவாததால் மக்கள் மனதில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இது மிகப்பெரும் சரிவையே உண்டாக்கும்.
Labels:
நிகழ்வுகள்
Tuesday, February 16, 2010
பதில் கேள்வி பிப்ரவரி 16
புனே குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்றி, துப்பு கொடுத்தா ஒரு கோடி பரிசு. மத்தியஅரசு
எங்களால கண்டுபிடிக்க முடியலைன்னு, டிசன்டா சொல்றிங்க...
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரபகிர்வு கொடுக்காவிட்டால், தி.மு.க., பார்த்து கொண்டு சும்மா இருக்காது
தமிழக முதல்வர் கருணாநிதி
திரும்பவும் அண்ணா நினைவிடத்தில், உண்ணாவிரதம் என்ற பெயரில் குடும்பத்தோட ரெஸ்ட் எடுக்க போறேன்னு செல்லுங்க...
மாதந்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்ய ஆலோசனை மத்தியஅரசு
இனி மாசமுழுவதும் ஆர்ப்பாட்டம், அறிக்கைகொடுப்பது என, எதிர்கட்சிகளுக்கு வேலை கொடுத்து, டயட் ஆக்கிருவிங்க போல....
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்த்தபின், தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க தேர்தல் கமிஷனிடம் மனு
எதிர்கட்சியா இருந்தாலும், மக்களுக்கு கிடைக்கும் 2000 ரூபாய், எல்லாருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்திருகிங்க போல...
மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பிடி கத்திரிக்காய்க்கு முற்றிலும் தடை.
மத்திய அரசு
பிடி கத்திரிக்கு தடை ஓகே... பீடிக்கு தடை எப்ப
கடந்த ஆண்டை விட விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அரிசி கிலோ 1 ரூபாய்க்கு வழங்குவது போல. காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தமிழகஅரசு வழங்கவேண்டும்.
பா.ம.க நிறுவனர் ராம்தாஸ்
கூட்டணியில சேத்துகிடுவாங்களான்னு தெரியாததால ரெம்ம குழம்பி, வீட்டு வீட்டுக்கு குழம்பு ஊத்தனுமின்னு செல்லுவீங்க போல.
குண்டு வெடிப்புக்கு காரணம், உள்துறையின் தோல்வி இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
தோல்வி இல்லை, மெத்தனபோக்குதான...
சிறையிலிருப்பவர் ஓட்டு போட முடியாது, தேர்தலில் போட்டியிடலாம். முன்னாள் தேர்தல் கமிஷ்னர் வேதனை.
100 ரூபாய் கட்டாதவர்கள் மின் இணைப்பு துண்டிப்பு ! லட்சக்கணக்கில் கட்டாதவர்கள் பட்டியல் மட்டும் வெளியிடுவர். இது தானே ஜனநாயக மரபு
Labels:
பதில் கேள்வி
Sunday, February 14, 2010
தண்ணீர்
தண்ணீரில் தெரியும் தேசிய ஒருமைப்பாடு
மாநிலங்களிடையே தண்ணீருக்காக, இனி யுத்தம் ஒன்றே பாக்கி.
மழைக்காலத்தில் வீணாக கடலிலே கலக்கும் நீரை முறைப்படி
சேமித்தாலே, தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லை.
நதிகள் இணைப்பு திட்டமும் தேவையில்லை.
ஒரே ஊரில்(திருப்பூரில்) ஒரு புறம் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது;
மறுபுறம் குடிநீருக்காக ரோட்டில் குடும்பத்துடன் தவமிருக்கும் வாழ்க்கை.
என்று தீரும் இந்த அவலம்........
Labels:
சமூகம்
Saturday, February 13, 2010
யானை
- யானை
இயற்கை வாழிடத்தை விட்டு வந்த
இந்த யானைக்கு குழாயிலாவது தண்ணீர்...
இயற்க்கையை அழிக்கும் மனிதர்களுக்கு
இனி என்ன நிலையோ ?
இந்த யானைக்கு குழாயிலாவது தண்ணீர்...
இயற்க்கையை அழிக்கும் மனிதர்களுக்கு
இனி என்ன நிலையோ ?
Labels:
இயற்கை
Thursday, January 28, 2010
ஒளி
Labels:
சமூகம்
வீண்
Labels:
சமூகம்
Subscribe to:
Posts (Atom)