
நிலவும் மேகமும் விளையாடும் கண்ணாமூச்சி
சூரியன் பகலில் தன் கோபக்கனலை காட்டுவதற்கு அச்சாரமாய், இந்த மேகக்கண்களை சிவப்பாக்கி அதிகாலையில் துயில் எழுகிறானோ.
இந்த பட்டு போன மரம், இனி துளிர்க்குமோ, அல்லது மக்கி மண்ணாகுமோ. நானும் ஒரு காலத்தில் வளமையாகதான் இருந்தேன், என்பதற்கு அடையாளமாக சில கூடுகளையும், சில காய்ந்த இலைகளையம் தாங்கி நிற்கிறது.